Lyrics

பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா இனிப்பில்லாத முக்கனியா இசை இல்லாத முத்தமிழா பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா அழகில்லாத ஓவியமா ஆசை இல்லாத பெண் மனமா அழகில்லாத ஓவியமா ஆசை இல்லாத பெண் மனமா மழை இல்லாத மாநிலமா மலர் இல்லாத பூங்கொடியா மலர் இல்லாத பூங்கொடியா பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா இனிப்பில்லாத முக்கனியா இசை இல்லாத முத்தமிழா பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா தலைவன் இல்லாத காவியமா தலைவி இல்லாத காரியமா கலை இல்லாத நாடகமா காதல் இல்லாத வாலிபமா காதல் இல்லாத வாலிபமா பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா நிலை இல்லாமல் ஓடுவதும் நினைவில்லாமல் பாடுவதும் பகைவர் போலே பேசுவதும் பருவம் செய்யும் கதை அல்லவா பருவம் செய்யும் கதை அல்லவா பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா இனிப்பில்லாத முக்கனியா இசை இல்லாத முத்தமிழா பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா
Writer(s): Kannadhasan, Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, Manayangath Subramanian Viswanathan Lyrics powered by www.musixmatch.com
Get up to 2 months free of Apple Music
instagramSharePathic_arrow_out